ஞானசார தேரர் கைது விடயத்தில் தங்கள் இயலாமையை ஏற்றுக்கொண்ட ஶ்ரீ லங்கா பொலிஸ் ...

நான்கு விசேட படையணிகள் மூலம் மூன்று வாரங்களாக மேலாக நாடெல்லாம் தேடியும் ஞானசார தேரரை கைது செய்யமுடியாமல் , போனமைக்கு தொடர்பில் தங்கள் இயலாமையை பொலிஸார் ஏற்றுக்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் ஞானசாரரிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்றில் ஒப்படைத்த பொலிசார் அவருக்கு பிணை வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதமை குறித்து கடும் விசனம் வெளியிட்ட நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல பொலிசாரைக் கடிந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment