நாட்டுக்காக பேசுவது, தற்போது இனவாதமாக மாறியுள்ளது.


அரசாங்கம் இனவாதத்தை அடக்க வேலைத்திட்டம் ஒன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், எனினும் எதிர்க்கப்பட வேண்டியது இனவாதமல்ல இன பேதமே எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்கவின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனவாதம் என்ற சொல்லுக்கான அர்த்தம் அகராதியிலும் இல்லை. அரசியல்வாதிகள் இந்த வார்த்தையை உருவாக்கினார். நாட்டுக்காக பேசுவது தற்போது இனவாதமாக மாறியுள்ளது.

சோமவங்ச அமரசிங்க போன்ற தலைவர்கள் உயிருடன் இருப்பார்களாயின் அரச வளங்களை விற்பனை செய்ய தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்திருப்பார்கள்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் தான் நாட்டுக்காக நான் குரல் கொடுப்பேன். நீதியையும், நியாயத்தை கோரி மக்கள் போராட வேண்டும் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Comments