கல்முனையில் ஹோட்டல்கள் திடீர் சுற்றிவளைப்பு


கல்முனை பிரதேசத்தில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள்,சிற்றுண்டி தயாரிக்கும் ஹோட்டல்கள் என்பன திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்படட போது மனித பாவனைக்கு உதவாத தரமற்ற சிற்றுண்டி வகைகள்,உணவுப் பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்படடன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாகடர் ஏ,எல். அலாவுதீனின் பணிப்புரைக்கமைய மாவடட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது மனித பாவனைக்கு உதவாத எண்ணெய்கள்,சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் தயாரிக்கப்படட பெருமளவிலான சிற்றுண்டி வகைகள், விற்பனைக்காக பொதி செய்யப்படட உணவு வகைகள் என்பன கைப்பற்றப்பட்ட்து.

இவ் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த ஹோடடல் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்ட்துடன் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய ஹோட்டல்களுக்கு குறிகிய கால அவகாசத்துக்குள் குறைபாட்டுகளை நிவர்த்தி செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது.



Comments