கந்தளாய் தி/ பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய அதிபராக H.M.நௌசாத் பதவியேற்பு
கந்தளாய் தி/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின். அதிபர் S.சரஸ்தீன் எதிர்வருகின்ற 2017.06.22 ஓய்வு பெறுவதினால் H.M.நௌசாத் இன்று 21 புதிய அதிபராக கடமையேற்றுள்ளார்.
மாஷா அல்லாஹ்!!!
இப்பாடசாலையின் பழைய மாணவரும் தி/பரமேஸ்வர, தி/அஸ்-ஸபா மற்றும் தி/ஜமாலியா வித்தியாலயத்தின் ஆசிரியராக பணியாற்றி கடந்த வருடம் (2015/2016) நடைபெற்ற அதிபர் சேவை பரீட்சையில் கந்தளாயில் தமிழ் பிரிவில் சித்தியடைந்த (2016 ஆண்டு ) முதல் ஆசிரியருமான H.M.நௌசாத் (அதிபர் ) தனது கடமையினை உத்தியோகபூர்வமாக முன்னால் அதிபர் S. சரஸ்தீன் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இவர் திருகோணமலை ஜமாலியாமகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையாற்றியவருமவார்.
இந்நிகழ்வானது ஓய்வு பெற்ற முன்னாள் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் S.M.ஹனீபா (அதிபர் ) முன்னிலையில் நடைபெற்றது இதில் பாடசாலையின் அபிவிருத்தி குழு அங்கத்தவர்கள் ,பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்கள்.
எனது ஊர் பாடசாலையில் அதிபராக முதலில் சேவையாற்ற வாய்ப்பு தந்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவனாக . இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அளவுக்கு சேவைசெய்வதாகவும் இது எனது பாடசாலை இப்பாடசாலையின் ஆசிரியர்கள் ,அபிவிருத்தி குழு ,பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக செயல்படுவதாகவும் புதிய அதிபர் கருத்து தெரிவித்தார்!
தகவல் பழைய மாணவர் சங்கம் தி/கந் /பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயம் கந்தளாய்



Comments
Post a Comment