முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் 19ம் திகதி வரை விளக்கமறியலில்
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007 ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
அதன்படி இன்றுகாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Comments
Post a Comment