கொழும்பில் சில பிரதேசங்களுக்கு இன்று 2 மணிமுதல் 12 மணி நேர நீர்வெட்டு


கொழும்பிலுள்ள சில பகுதிகளில் இன்று (15) பிற்பகல் 2.00 மணிமுதல் 12 மணி நேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்தவகையில்,  கொழும்பு கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிரான்ட்பாஸ் மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.
இன்று (15) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் நாளை (16) அதிகாலை 2 மணி வரை இந்த தடை அமுலில் இருக்கும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

Comments