20 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் ஆட்சி! மகிந்தவால் மைத்திரியின் உயிருக்கு ஆபத்து?
மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய முயற்சித்தால் அதற்கான வழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடமாட்டார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி தெரிவித்தமை தொடர்பில் இதன் போது கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜித சேனாரட்ன, "கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை கொழும்பிற்கு வந்திருந்த போது மகிந்த இது குறித்து தெளிவாக கூறியிருந்தார்.
மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் 20 ஆண்டுகளுக்கு திருப்பி கொடுக்க போவதில்லை என மகிந்த தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் அவரின் குடும்பத்தினருக்கு பலியாக நேரிடும் என்பதை ஜனாதிபதி அறிந்துள்ளார்.
எனவேதான், மகிந்த குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வர முற்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான வழியை விடமாட்டார்" என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment