2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 62 மாணவர்களை பாராட்டி வங்கிக்கணக்குப் புத்தகம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை காலை 9.30 மணியளவில் கொக்கட்டிச்சோலை பிரதேச கலாச்சார மண்டபத்தில் அறிவாலயத்தின் ஆலோசகர் சி முகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், அலையப்போடி நல்லரெத்தினத்தினால் வழிநடத்தப்படும் அறிவாலயம் நிறுவனம் ஆண்டு தோறும் நடத்தும் இந்த கௌரவிப்பு நிகழ்வில் இந்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் 5 ஆயிரம் ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும், இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன்,ச.வியாலேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன், கௌரவ அதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம்,பிரதேச செயலாளர் தட்சனாகௌரி திணேஸ், முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் சத்தியநாதன், மக்கள் வங்கி முகாமையாளர் மா.மோகணதாஸ் ஆகியோருடன் விசேட அதிகளும், அழைப்பு அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Comments