ராயல் கிண்ண இறுதிப்போட்டியில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி 205 ஓட்டங்களால் வெற்றி
மூதூர் கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏட்பாட்டில் ராயல் பெயிண்ட் நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்தப்பட்டு வந்த 50 ஓவர் கொண்ட இறுதிப்போட்டியில் மூதூர் வெஸ்டர்ன் வாரியர்ஸ் மற்றும் மூதூர் லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின.
நாணயசுழட்சியில் வெற்றி பெற்ற மூதூர் லெஜெண்ட்ஸ் அணி மூதூர் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட இணக்கம் தெரிவித்தனர். அந்தவகையில் மூதூர் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி 50 ஓவர் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றனர். இதில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி சார்பாக சயான் 112 பந்துகளுக்கு 95 ஓட்டங்களையும், நுஸ்ரி 32 பந்துகளுக்கு 64 ஓட்டங்களையும், சமீர் 48 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்று அரை சத்தத்தை பூர்த்தி செய்தனர்.
367 என்ற இமாலய இலக்கை வெற்றியின் இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மூதூர் லெஜெண்ட்ஸ் அணி 30.5 பந்துகளுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவினார். இதில் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி சார்பாக சதாம் 5 விக்கெட்களையும், முஜீஸ் மற்றும் ரிஷான் போன்றோர்களினால் தலா 2 விக்கெட்களையும், நிபாம் 1 விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேலும், ஆட்டநாயகனுக்கான விருது சயான், தொடரின் ஆட்டநாயகனுக்கான விருது சதாம் போன்றோர்கள் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி சார்பாக பெற்றுக்கொண்டதோடு, வெற்றி மற்றும் தோல்வி அடைந்த இரு அணிகளின் சகல வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்க்கப்பட்டனர்.





Comments
Post a Comment