மூதூர் மல்லிகைத்தீவு 3 சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம். சந்தேக நபருக்கு DNA டெஸ்ட்.


3 சிறுமிகளை   பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும்  சந்தேகநபரின் மரபணுவினை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, மூதூர் நீதிபதி இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கோரிக்கை விடுத்திருந்தது.

மூதூர் மல்லிகைத்தீவு பகுதியில் இடம்பெற்ற  இந்த துஷ்பிரயோகம் கடந்த மே மாதம் இடம்பெற்றதுடன் நாடு முழுதும் அதிர்ச்சியை செற்படுத்தியது.

சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டெம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

Comments