குவைட் அமீரை மானபங்கப்படுத்தியவருக்கு 3 வருட சிறை
குவைட் அமீருக்கு எதிராக டுவிட்டர் சமூகவலைத்தளத்தினூடாக மானபங்கப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினரான ஷேக் அப்துல்லாஹ் அல் செல்ம் அல் சபாவிற்கு வழங்கப்பட்டிருந்த 3 வருட சிறைத்தண்டனையை குவைட் மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குவைட் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டிருந்த தீர்ப்புக்கு எதிராக குவைட் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல் சபா மேன்முறையீடு செய்திருந்தார்.
இதற்கான தீர்ப்பையே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு வழங்கியுள்ளது.


Comments
Post a Comment