கட்டாருக்கு மேலும் 48 மணித்தியால கால அவகாசம்
சவூதி அரேபியா மற்றும் ஏனைய மூன்று அரேபிய நாடுகள் கட்டாருக்கு மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அல்ஜஸீரா செய்தி ஊடகத்தை ரத்து செய்தல் உள்ளிடட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவற்றை பூர்த்தி செய்ய அரபு நாடுகள் கட்டாருக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது.
ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்ற நிலையில், இந்த கால அவகாசம் இன்னும் 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
கட்டார் கடும்போக்குவாதத்தை போசிப்பதாகக் குற்றம் சுமத்தி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .


Comments
Post a Comment