காலை 8.00 மணி முதல்11 மணி நேர நீர்வெட்டு


கொழும்பைச் சூழவுள்ள சில பகுதிகளில் இன்று (30) காலை 8.00 மணி முதல் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென நீர்விநியோக, வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்தவகையில்,  களனி, பேலியகொட, மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்  சபை மேலும் தெரிவித்துள்ளது.

Comments