மூதூரில் ஆயிஷா மக்தப் ஓராண்டு நிறைவு விழா

Jawabdeen Jasry

மூதூர் பெரியபால பிரதேசத்தில் இயங்கிவரும் அப்பாஸ் இஸ்லாமிய கல்வி நிலையம் 2017.07.09 தமது ஆயிஷா மக்தபின் ஓராண்டு நிறைவு விழாவுக்கு அஷ் -ஷெய்ஹ் முஹம்மது ஸப்ராஸ் (நத்வி) அவர்கள் தலைமைதாங்கினார்கள்.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் இ லங்கா அசோக் லேய்லேன்ட் நிறுவனத்தின் பனிப்பாளருமாகிய அஷ்-ஷேய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் (நளீமி) கலந்து சிறப்பித்தார்.அவர் தனதுரையில் ஆன்மீக கல்வி ஒழுக்க விழுமியங்களுடனான சமூகமொன்றை உருவாக்க இவ்வாறான மக்தப்கள் பெரும் பங்காற்றுகிறது .

இளஞ்சிட்டுகளுக்கு அல்-குர்ஆனையும் இ தூதரையும் அறிமுகம் செய்வதற்கும் , வாசிப்பு பழக்கத்தை ஊட்டுவதற்கும் மேலும் சமூக உருவாக்கத்தின் அத்திவாரமாக இவ்வாரான மக்தப்கள் பரிணமிக்கின்றது என்று உரையாற்றிச்சென்றார் .

மூதூர் பிரதேசத்pன் மக்தப் இணைப்பாளர் அல் -ஹாபில் எம்.றஸூல் (நத்வி) திட்ட முகாமையாளர் அப்பாஸ் ஹிதாயதுல்லாஹ் , மௌலவி ஸாலிஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

Comments