மகிந்த உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் பொய் கூறுகின்றனர்: ருவான் விஜயவர்தன


கூட்டு எதிர்க்கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் படையினர் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறுகிய நோக்கம் கொண்ட அரசியலில் ஈடுபடும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதியும் கூட்டு எதிர்க்கட்சியும் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் எனவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இராணுவத்தினருடன் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கை பாதுகாப்பு படையினருக்கு சர்வதேச நாடுகளில் வரவேற்பும், பயிற்சிகளை வழங்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கும் வகையிலான நீதிமன்றங்கள் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட மாட்டாது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் வழிக்காட்டலிலேயே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் தற்போதைய அரசாங்கம் செயற்பாடாத அரசாங்கம் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதியும் கூட்டு எதிர்க்கட்சியும் அரசியல் இலாபம் கருதி அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கம் உருவாக்கி பிரச்சினைகள் மற்றும் இராணுவத்தினரின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கமே தீர்த்து வருகிறது. 

இதனால், எந்த தரப்பு இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது என்பதை முழு நாடும் அறியும்.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதே எங்களின் தேவை எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Comments