அடுத்த பாராளுமன்ற அமர்வில் உள்ளூராட்சி மன்ற சட்டமூலம்
எம்.ஆர்.எம்.வஸீம்)
பின்னர் தேர்தல் அறிவிப்பு என்கிறார் அமைச்சர் பைஸர்
உள்ளூராட்சி மன்ற சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கவுள்ளோம். பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை அறிவிக்க முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்டமூலத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு தற்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்.
இந்நிலையில் கட்சி தலைவர்களின் கூட்டங்களின்போது சில கட்சிகள் சட்டமூலத்தில் ஒருசில திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றன. அத்துடன் தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அனைத்து கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
மேலும் தேர்தல் பிற்படுத்தப்படுவது தொடர்பாக அரசாங்கத்துக்கு குறை கூறிவந்தவர்களுக்கு தற்போது அதன் உண்மை நிலை தெரியவந்துள்ளது. குறிப்பாக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும்போது இருந்த பிரச்சினை மற்றும் தொகுதிவாரி முறை தேர்தலில் சிறு கட்சிகளுக்கு ஏற்படக்கூடிய அநீதி தொடர்பான விடயங்கள் தீர்க்கப்படவேண்டியிருந்தன.
மேலும் அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது குறித்த சட்டமூலம் சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கி 55நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை அறிவிக்கவேண்டும்.
அத்துடன் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து மன்றங்களில் இருந்தும் 25வீதமான பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளமை விசேட அம்சமாகும். இதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கருத்துதெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதென்றே தீர்மானித்துள்ளது.
என்றாலும் எம்முடன் பல கட்சிகள் இணைந்திருப்பதால் அந்த கட்சிகளுடன் இணைந்து தேர்தலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் எந்த சின்னத்தில் போட்டியிடுவதென்று கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்.
அத்துடன் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. அவ்வாறானதொரு எண்ணமும் எங்களுக்கில்லை. கடந்த பொதுத்தேர்தலிலும் நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே போட்டியிட்டோம் என்றார்.

Comments
Post a Comment