தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் றாப்தீன் இம்தாத் கௌரவிப்பு


மட்டக்களப்பில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் 110 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் பிரிவில் 01 ஆம் இடத்தினை பெற்று தங்கப் பதக்கம் வென்ற தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் றாப்தீன் இம்தாத் இன்று புதன்கிழமை பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

கல்லூரியின் அதிபர் ஏ.ஆர்.எம்.ஆரிப் ,ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்களின் ஆரவாரத்துடன் மாணவன் இம்தாத் மற்றும் மாணவனை பயிற்றுவித்த விளையாட்டு ஆசிரியர் கே.எம்.றிபாஸ் ஆகியோர் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments