புதிய அரசியலமைப்பினால் புத்த மதத்துக்கு பாதிப்பு இல்லை..
Ihzna Fareed
உத்தேச அரசியல் அமைப்பில் புத்த மதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்ததொரு சரத்தும் இல்லை என, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (8) தெரிவித்தார்.
மாவனெல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிய அரசியலமைப்பில் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக எண்ணியே, மகாநாயக்க தேரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதாவது தமிழ்க் கட்சிகள் புத்த மதத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும் எனக் கூறவில்லை.அது ஏனைய மத நடவடிக்கைகளுக்கு அசாதாரணம் ஏற்படுத்தக் கூடாது என்ற பகுதியை இணைக்குமாறே கோரியிருந்தன என, அவர் மேலும் தெரிவித்தார்.


Comments
Post a Comment