வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றம் அரசியலுக்கு அப்பால் நோக்கப்படல் வேண்டும்; அமைச்சர் றிஷாத்திடம் அஸ்மின் எடுத்துரைப்பு.  

n.m. abdullah

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் “நீண்டகால அகதிகளை மீளக்குடியேற்றுவதற்கான செயலணி” யின் செயற்பாடுகளை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் உயர்மட்ட சந்திப்பு (30-6-2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

 இச்சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மாவை சேனாதிராஜா, கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அய்யூப் அஸ்மின், கௌரவ இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரும், மாவட்ட செயலகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர், மீள்குடியேற்ற செயலணி சார்பில் அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களும், மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் ஜனாப் யாஸீன் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் அமீன் அவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பின்போது மீள்குடியேற்ற செயலணியினால் வழங்கப்பட்ட 200 வீடுகளை வழங்குவது தொடர்பில் முக்கியமாகப் பேசப்பட்டது, உடனடியாக 60 குடும்பங்களுக்கான வீடுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன, அத்தோடு மேலதிகமான வீடுகளை வழங்குவதற்கு ஏற்றவகையில் பறச்சேறிவயல் காணிகளை மேட்டுக்காணிகளாக மாற்றியமைப்பது தொடர்பிலும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றமானது முழுமையாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினாலேயே ஒழுங்கமைக்கபப்டுதல் வேண்டும் என்றும் அதற்கு யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.

அத்தோடு மீள்குடியேற்ற செயலணிக்காக அமைச்சர் சார்பில் எவரேனும் இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்களா என்ற கேள்வியை அய்யூப் அஸ்மின் அவர்கள் அமைச்சர் றிசாத் அவர்களை நோக்கி எழுப்பினார், அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள் அவ்வாறு எவரையும் இணைப்பாளர்களாக நியமிக்கவில்லை என்று பதில் தெரிவித்தார், அதன் பின்னர் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணச்சபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள்; பொதுவாக வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமானது 

அரசியலுக்கு அப்பால் அணுகப்படுதல் வேண்டும், அரசியல் நலன்கள் முன்வைக்கப்படுகின்றபோது மீள்குடியேற்றத்தை சீராக எம்மால் அமுலாக்க முடியாது, அதுமாத்திரமன்றி வடக்கு மாகாணசபையோடும் ஒரு ஒருங்கிணைப்பு அவசியப்பட்டுகின்றது, அவ்வாறு இடம்பெறாவிட்டால் செயற்திட்டங்களை அமுலாக்குவதில் பல்வேறு குழறுபடிகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்தார், அவற்றை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கூடாக ஒருங்கிணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Comments