அஷ்ரபின் மனைவி தொடக்கம் ஹசன் அலி வரை இருபத்தியேழு பேர் கட்சியில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஷ்ரபின் மனைவி தொடக்கம் முன்னாள் செயலாளர் ஹசன் அலி வரை இருபத்தியேழு பேர் கட்சியில் இருந்து துரத்தப்பட்டுள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
நேற்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206டி கிராம சேவகர் பிரிவிற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வட்டாரக் கிளை அங்குரார்பன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Comments
Post a Comment