நீ என்ன மஹர் தருவாய் ?
மணமகனே நான்
உன்னிடம் கேட்கிறேன்
நீ என்ன மஹர் தருவாய்
எனக்கு - எதற்காக என்கிறாயா?
உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும்
உன் குடும்பத்திற்கும்
சேவை செய்வதற்கும்!
குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!
உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்
நானும் தகப்பன் என்று
பெருமிதம் அடைவதற்காக!
என் தாய் தந்தையை
என் உடன் பிறந்தவர்களை, தோழிகளை
நான் வாழ்ந்த இடத்தையே
விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்
வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?
By Mohamed Fasmeer


Comments
Post a Comment