சோக மயத்தில் இன்று கல்முனை !

ஹுதா உமர்.

முஸ்லிம் மக்களின் முகவேற்றிலையான அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மண் இன்று ஒரு சோகம் மிக்க நாளாக மாறியிருக்கிறது.

மூத்த அரசியல்வாதியும் ஐ.தே.கட்சியின் ஆட்சியில் அடிவேராக திகழ்ந்தவருமான கல்முனையின் தவப்புதல்வர் எ.ஆர் எம் மன்சூர் அவர்களின் மரணச்செய்தியை கேள்வியுற்றதில் மிக்க கவலையடைகிறேன்.

கல்முனையில் வரலாற்று சிறப்புமிக்க பல அபிவிருத்திகளை நிலையான தர்மமாக செய்து இன்றும் மக்கள் பயன்பெறும் பல நிலையங்களை உருவாக்கிய மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் மன்சூரின் இழப்பு கல்முனை மண்ணுக்கு மற்றுமின்றி இலங்கை மக்களுக்கும் பாரிய இழப்பே

கல்முனை மண்ணை மாநகரமாக மாற்றியமைத்து தந்த முன்னாள் அமைச்சர்  மன்சூர் அவர்கள் தனது அமைச்சை சரியாக பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை செய்த ஒருவராவார். பல அரசியல் தலைவர்களையும், அமைச்சர்களையும் கண்ட கல்முனை மண்ணில் இவரது  காலத்தில் செய்யப்பட்ட சேவைகளே இப்போதும் கல்முனையை அலங்கரிப்பது இவரது ஆளுமைக்கும் சேவைக்கும் சிறந்த உதாரணமாகும்.

இலங்கை வங்கி கட்டிடம், கல்முனை பொதுச்சந்தை,வீடமைப்பு அதிகார சபை கட்டிடத்தொகுதி ,மேலும் பல பாடசாலை கட்டிடங்கள் இன்றும் வலிமையுடன் தலைநிமிர்ந்து நின்று கல்முனையை அலங்கரிப்பது இவரின் ஆளுமையின் வெளிப்பாடாகும்.

அன்னாரின் துயரில் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,அவரது அரசியல் ஆதரவாளர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன், அன்னாரின் பொதுச்சேவைகளையும், நல்லமல்களையும் அங்கிகரித்து எல்லாம்  வல்லனாயகன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய பரிசை வழங்கிட பிராத்திக்கிறேன்.

அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர்
தலைவர்,அல்-மீஸான் பௌண்டசன்,
இலங்கை.

Comments