பௌத்த பீடங்களின் அதிர்ச்சிகரமாக முடிவு


நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது அர­சியல் யாப்பு திருத்­தமோ தேவை­யில்லை என  நான்கு பிர­தான பௌத்த பீடங்­களின் மகா நாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சபைகள் கூடி முடிவு செய்­துள்­ளன. 

பிர­தான பௌத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய, மல்­வத்த மற்றும் அம­ர­புர உள்­ளிட்ட பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்கள் மற்றும் பெளத்த சபைகள் கண்­டியில் நேற்று முன்­தினம் கூடி எடுத்­துள்ள இந்த தீர்­மானம் இன்று வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பின் போது முன் வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டில் இல்­லாத பிரச்­சினை ஒன்றை ஏற்­ப­டுத்­து­கின்ற விடயம் என்றும் அவ்­வா­றா­ன­தொரு மாற்றம் அவ­சி­ய­மற்­றது என்றும் பௌத்த பீடங்­க­ளினால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

புதிய அர­சியல் யாப்பு நாட்­டுக்கு பொருத்­த­மற்­ற­தாக இருப்­பதால் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் யாப்­பையே தொடர்ந்து பேணு­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்றும் மேற்­படி பௌத்த பீடங்கள் தீர்­மா­னித்­துள்­ளன. 

எனினும் அர­சாங்கம் பௌத்த பீடங்­களின் நிலைப்­பாட்டு தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­துடன் தமக்கு வாக்­க­ளித்த 62 இலட்சம் மக்­களின் ஆணையை மீறும் வகையில் செயற்­பட முடி­யாது என்றும் தெரி­வித்­துள்­ளது.

நேற்­றைய தினம் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­பட்­டது வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கே அன்றி, வெறு­மனே பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தற்கு அல்ல என சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  

அர­சி­ய­ல­மைப்புச் சபையின் நட­வ­டிக்­கைகள் முன்­னோக்கி எடுத்துச் செல்­லப்­படும் எனவும், இதன் இறுதி முடிவை பாரா­ளு­மன்­றமே எடுக்கும் எனவும்  தெரி­வித்­துள்ள அவர், ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வந்த வேளை எதிர்த்­த­வர்கள், இப்­போது அத­னையே செயற்­ப­டுத்த வேண்டும் எனக் கூறு­வது ஏன் என்று தெரி­ய­வில்லை எனவும் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இந்த நாட்டில் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் முக­மா­கவும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழித்து ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்தும் வகை­யிலும் புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக அதன் வரை­புகள் இறு­திக்­கட்­டத்தை அடைந்து பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் பௌத்த பீடங்கள் இவ்­வா­றான அதிர்ச்­சி­ய­ளிக்­கத்­தக்க தீர்­மா­னத்தை எடுத்­தி­ருப்­பது கவ­லையைத் தரு­கி­றது.

இந்த முடிவை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறும் சகல மக்­க­ளி­னதும் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்யும் வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்­புக்குத் தடை­யாக இருக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் மேற்படி பௌத்த பீடங்கள் தமது தீர்மானத்தை வாபஸ் பெறுவதுடன் இந்த நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்குத் தேவையான புதிய அரசியலமைப்பை வெற்றிகரமாக நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். 

Comments