கிண்ணியாவில் வடிகாலமைப்பு சபையின் உப அலுவலகம் திறந்து வைப்பு.


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (15) கிண்ணியா பிரதேசத்துக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உப காரியாலயத்தை கிண்ணியா பிரதேச சபை கட்டிடத்தில் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், மாகாணசபை உறுப்பினர்களான ஜே.எம். லாஹிர், ஆர்.எம். அன்வர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், கிழக்கு பிராந்திய பிரதி பொது முகாமையாளர் எம்.றசீட் உள்ளிட்ட உயரதிகாரிகள், கலந்து கொண்டார்கள்.

Comments