#அதாவுல்லாஹ் #கிழக்கு #மாகாண #ஆளுனர்#பதவியை #ஏற்கக்கூடது.



கிழக்கு மாகாண ஆளுனர் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் நியமிக்கப்படலாம் என்று அக்கட்சி ஆதரவாளர்கலாலும் சமுக ஆர்வளர்களாலும் ஆங்காங்கே முகநூல்களில் பேசப்படுகிறதை அவதனிக்க முடிகிறது.

இருந்தும் சகோ #அதாவுல்லாஹ் ஒரு சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல எந்த வேலையும் தைரியமாக செய்யக்கூடிய ஒரு திறமை சாலியும் கூட என்பதை கடந்த காலங்களில் பல சேவைகளை செயலளவில் செய்து காட்டி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பதை கூறியே ஆகவேண்டும்.

அப்படிப்பட்டவர் கடந்த தேர்தலில் துரஸ்ட வசமாக மகிந்தவுடன் சேர்ந்து பதவியில் இருந்து தூரமாக்கப்பட்டார்.  
அப்படி இருந்தும் மக்கள் (குறிப்பாக அக்கரைப்பற்று மக்கள்) மனதிலிருந்து தூரமாக்கப்பட வில்லை. அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் கூட குறைய வில்லை என்பதை இன்றும் அவதனிக்க முடிகிறது.

அப்படிப்பட்ட ஆளுமைமிக்க அரசியல்வாதி எதிர்காலத்தில் நிச்சயம் மீண்டும் மக்கள் செல்வாக்கை பெற்று அரசியல் அந்தஸ்துடன் வரக்கூடிய வாய்புகள் அதிகம் இருக்கிறது. அப்படி வருவதையே மக்களும் எதிர்பார்கிறார்கள்.

காரணம் சகோ அதாவின் இடைவெளி இன்று பிரதேச மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல   "விரால் இல்லாத குளத்துக்கு குறட்டையாம் அதிகாரி" போல் சிலபேர் அரசியல்வாதி என்ற முகவரியுடன் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நேரத்தில் இந்த கிழக்கு மாகாண ஆளுனர் பதவி அதாவுல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டாலும் அவர் அதை ஏற்கக்கூடாது. மாறாக தேர்தலில் நின்று மக்களின் ஆதரவுடன் அல்லாஹ்வின் உதவியுடனும் ஜெயிச்சு மக்கள் மத்தியில் ஜாம்பவானாக வந்து மக்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல ஏழை மக்களை ஏமாற்றும் போலி அரசியல் அரக்கர்களையும் துரத்த வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

ஆளுனர் பதவியை அதாவுல்லாஹ் செய்ய மாட்டார் என்பதல்ல கருத்து. நிச்சயம் திறன்பட செய்வார் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ஆனால் பொய்களைக் கூறி போலி வேசம் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களை மீட்டெடுத்து. சிறந்த முறையில் ஒற்றுமையாக மக்களை ஊர் வாதம், பிரதேசவாதம், இனவாதம் இல்லாத அரசியலை ஒற்றுமையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எதிர்பார்பாகும்.

"புலி பசித்தாலும் புல் தின்னாது" என்பது பழமொழி.

"பதவிகளுக்கும் பட்டத்துக்கும் சோரம் போகாதவர் அதாவுல்லாஹ் என்பது புது மொழி"

எக்காரணம் கொண்டும் ஆளுனர் பதவியோ அல்லது வேறு ஏதாவது பதவியோ எடுத்து உங்கள் அரசியல் பயனத்தை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விடாமல். மக்களுக்கான அரசியல் பயணம் வெற்றியுடன் நீண்டு செல்ல வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம்.

ஒலுவில் ஜெலில்.

Comments