நான்கு பௌத்த பீடங்களும் தமது நிலைப்பாட்டை பரிசீலிக்க வேண்டும் – ஐம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்
விடிவெள்ளி
பல் இன மக்களையும், பல சமயங்களையும் கொண்டுள்ள இலங்கைக்கு மத சுதந்திரத்தையும் உரிமைகளையும் வழங்கக்கூடிய புதியவோர் அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசியமாகும்.
நான்கு பௌத்த பீடங்களினதும் தேரர்கள் நாட்டுக்கு புதிய அரசியலமைப்போ அரசியல் அமைப்புத் திருத்தங்களோ தேவையில்லை என்று தெரிவித்துள்ள கருத்துகளை அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
நாட்டுக்கு புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத் தங்களோ தேவையில்லை என்று பௌத்த பீடங்களின் தேரர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கருத்துகள் தொடர்பில் உலமா சபையின் விளக்கத்தை தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பெரும்பான்மை சமூகத்தின் உரிமைகள் அம்மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் என்பவை தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையுமில்லை. அவற்றை நாம் எதிர்க்கவுமில்லை.
ஆனால், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாத அமைப்புகள் இலங்கையில் முஸ்லிம்களுக்குத் தனியான சட்டம் தேவையில்லை, தமிழர்களுக்கு தேச வழமை சட்டம் தேவையில்லை என விவாதிப்பது தவறானதாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களும் தமது சமயங்களை அனுஷ்டிப்பதற்கு உரிமையுண்டு.
இந்த நாடு எமக்கு மாத்திரம்தான் சொந்தமானது என எவருக்கும் உரிமை கொண்டாட முடியாது.
இது எமது நாடு. இந்நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்கும் நாடு சொந்தமானதாகும். அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளது போன்று இந்நாட்டில் வாழும் சமூகங்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வந்தனவே.
சமூகங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் பிரச்சினைகள், சந்தேகங்கள் நிலவுமென்றால் அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இனங்களுக்கிடையில் நல்லுறவும், புரிந்துணர்வும் நிலவினாலே நல்லிணக்கம் பலப்படும்.
பல்லின சமூகத்தினருடன் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை புனித குர்ஆன் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளது. முஸ்லிம்கள் அனைவரையும் சகோதரர்களாகக் கருதுபவர்கள்.
புதிய அரசியலமைப்புக்கான ஏற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் அதனை எதிர்க்காது அதனால் நாட்டுக்கு ஏற்படப்போகும் நன்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புதிய அரசியலமைப்பை வரவேற்கிறது என்றார்.

இந்த நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது சரியான கருத்தன்று.
ReplyDeleteமாறாக வெளியிலிருந்து வந்தவர்களான விஐயனின் சந்ததியினர், அரேபியர் வழி வந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள், மலேயாவிலிருந்து வந்த மலாய் பேசும் முஸ்லிம்கள், தென்னிந்திய முஸ்லிம்கள், இந்தியாவிலிருந்து கொணரடு வரப்பட்ட மலைநாட்டுத் தமிழர், போர்த்துக்கேய, டச்சு பறங்கியர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நாட்டில் பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்களில் தமிழரும் அடங்குவர். இந்திய தமிழ் மன்னர்களின் ஊடுருவலால் இந்து சமயமும், பௌத்த மன்னர்களின் வரவால் புத்தமும், அரேபியரின் வருகையால் இஸ்லாமும், ஐரோப்பியரின் வருகையால் கிறிஸ்தவமும் இந்நாட்டில் மதங்களாக நிலை கொண்டன.
இந்த நாட்டின் ஆதிக் குடிகளான தமிழரும், சிங்களவரும் முறையே இந்து, புத்த, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய நான்கு சமயங்களையும் பின்பற்றியிருந்தமை தெளிவாகிறது.
இங்கு வாழ்ந்த அரக்க குலத்தவர்் இராவணன் முதலானவர்கள் தமிழராகவும், சிவனை வழிபடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
அதே அரக்க இனத்தவரான ஏக இறைவனை ஏற்றவர்கள் முஸ்லிம்கள் (இஸ்லாமியரல்லர்) இந்த நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது சரியான கருத்தன்று.
மாறாக வெளியிலிருந்து வந்தவர்களான விஐயனின் சந்ததியினர், அரேபியர் வழி வந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள், மலேயாவிலிருந்து வந்த மலாய் பேசும் முஸ்லிம்கள், தென்னிந்திய முஸ்லிம்கள், இந்தியாவிலிருந்து கொணரடு வரப்பட்ட மலைநாட்டுத் தமிழர், போர்த்துக்கேய, டச்சு பறங்கியர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நாட்டில் பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்களில் தமிழரும் அடங்குவர். இந்திய தமிழ் மன்னர்களின் ஊடுருவலால் இந்து சமயமும், பௌத்த மன்னர்களின் வரவால் புத்தமும், அரேபியரின் வருகையால் இஸ்லாமும், ஐரோப்பியரின் வருகையால் கிறிஸ்தவமும் இந்நாட்டில் மதங்களாக நிலை கொண்டன.
இந்த நாட்டின் ஆதிக் குடிகளான தமிழரும், சிங்களவரும் முறையே இந்து, புத்த, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய நான்கு சமயங்களையும் பின்பற்றியிருந்தமை தெளிவாகிறது.
இங்கு வாழ்ந்த அரக்க குலத்தவர்் இராவணன் முதலானவர்கள் தமிழராகவும், சிவனை வழிபடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
அதே அரக்க இனத்தவரான ஏக இறைவனை ஏற்றவர்கள் முஸ்லிம்கள் (இஸ்லாமியரல்லர்) நாற்பது முழம் வரை உயர முடையவர்களாக இருந்முள்ளனர். இவரகளது அடக்கத் தலங்கள் இந்நாட்டின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் இறைநேசர்களினது என நம்பப்பட்டு இஸ்லாமியரால் கொண்டாடப்படுகிற நிலைமை இன்றும் காணக் கூடியதாகவுள்ளது.
அரேபியாவிலிருந்து வர்த்தகத்துக்காக வந்த இஸ்லாத்தைக்கு முந்திய சில முஸ்லிம்கள் மன்னார் மாதோட்ட துறைமுகத்தில் வாழ்ந்த கம்மாளரான தமிழர்களை மணந்திருக்கின்றனர். அவர்களது ஊடக மொழியாக அரபுத் தமிழ் என்ற Transliteration முறையில் உருவாக்கப்பட்ட அரபி எழுத்தைக் கொண்ட தமிழ் மொழியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இந்திய உபகண்டத்தில் இருந்து இங்கு வந்தடைந்த விஜயன் இங்கு வாழ்ந்த நாக இனத் தலைவியான குவேனியை மணமுடித்து பிறந்த சந்ததிகளும் உளர். இவர்கள் இங்கிருந்த அப்போதைய மொழியான சிங்களத்தை பேசியிருக்க வேண்டும்.
மற்றும் வேடர்களாக இன்றும் வாழ்பவர்களும் இன்றுமுளர்.
நாற்பது முழம் வரை உயர முடையவர்களாக இருந்முள்ளனர். இவரகளது அடக்கத் தலங்கள் இந்நாட்டின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் இறைநேசர்களினது என நம்பப்பட்டு இஸ்லாமியரால் கொண்டாடப்படுகிற நிலைமை இன்றும் காணக் கூடியதாகவுள்ளது.