அரசாங்கத்துக்கு எதிராகவுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனக்கே திட்டு-மஹிந்த


ஐக்கிய தேசிய கட்சியினதும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினதும் உறவு தற்போது வலுவிலந்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அனைத்துக்கும் என் மீது குற்றம் சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னையே இந்த அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Comments