அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான மஹிந்த- பசில் மந்திராலோசனை
அரசாங்கத்தின் அடக்குமுறைகள் எதேச்சாதிகார தீர்மானங்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் மந்திராலோசனை நடத்த உள்ளனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் வாரங்களில் மஹிந்த மற்றும் பெசில் தலைமையில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.போராட்டங்களை கட்டுப்படுத்தல், அரசியல் அமைப்பு குறித்து ஏதேச்சாதிகார போக்கில் செயற்படுதல் போன்றன தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பதில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.


Comments
Post a Comment