ஜனாதிபதி இல்லை என்று கூறினாலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!- மகிந்த


பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயந்து கிரிக்கெட் மைதானத்தின் தொழிலாளிகளின் காற்சட்டைகளை கூட அரசாங்கம் கழற்றிக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு புதிதாக வாகனங்களை இறக்குமதி செய்ய போவதில்லை என ஜனாதிபதி கூறினாலும் அது நிறுத்தப்படவில்லை எனவும் புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி உட்பட 8 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடத்திச் செல்ல அவன்கார்ட் மெரிட்டைம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments