தம்புள்ள விகாரையில் பெரும் மோசடி; புள்ளிவிபரம் வெளியிட்ட அகில!


தம்புள்ள ரஜ மகா விகாரை, இலங்கையில் அதிக வருமானம் உள்ள விகாரையாக இருக்கின்ற போதிலும் அங்கு பெரும் மோசடி நிலவி வருவதாக அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த அமைச்சர் அகில விராஜ் இன்று புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் குறித்த விகாரையின் நுழைவுச் சீட்டுக்காக ஒரு டொலர் அறவிடப்பட்ட 2000ம் ஆண்டு வருமானம் 2,919,900 என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 1500 ரூபா அறவிடப்பட்டும் 2015ம் ஆண்டு வருமானம் 2,971,000 ரூபா எனவே கணக்குக் காட்டப்பட்டுள்ளதாகவும் அஙகு இடம்பெறும் நிதி மோசடியைக் கண் மூடிப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசுக்கு விகாரை நிர்வாகங்களில் தலையிடும் உரிமையில்லையென அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருந்ததோடு நிர்வாகங்களில் தலையிட அனுமதிக்கப் போவதுமில்லையென சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments