முஸ்லிம் உயர் அதிகாரிகளையும் நியமியுங்கள் – கிண்ணியா குரல் ஊடக அமைப்பு


Ihzana Fareed

திருகோணமலை மாவட்ட அரச அலுவலகங்களில் முஸ்லிம் உயர் அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியா குரல் ஊடக அமைப்பு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட பின்னர் இந்தக் கோரிக்கை முன் வைக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 2 மாவட்டங்களுள் திருகோணமலை மாவட்டமும் ஓன்று. ஆனாலும் இம்மாவட்ட முக்கிய அரச அலுவலகங்களான கச்சேரி உட்பட ஏனைய அலுவலகங்களில் முஸ்லிம் பொறுப்பதிகாரிகள் இல்லை.

இந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்த போதும் இதுவரை எதுவும் நடக்க வில்லை.

எனவே புதிய முஸ்லிம் கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 
இது விடயத்தில் எதாவது முன்னெடுப்புகள் செய்ய வேண்டும் என அக்கோரிக்கையை தெரிவிக்கப் பட்டுள்ளது

Comments