பங்களாதேஷ் செல்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் 13ஆம் திகதி பங்களாதேஷ் செல்லவுள்ளார்.
இருநாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் அந் நாட்டுப் பிரதமர் ஷெய்க் ஹசீனாவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment