வட மாகாண தொன்டர் ஆசிரியர்கள் நேர்முகப் பரீட்சையில் குளறுபடிகள்.

Rizwan Abubucker Thimmath Thiwan

அதிகாரிகளின் அசமந்த போக்கா ?
அரசியல் வாதிகளின் தலையீடா ?

தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட மாகாண தொன்டர் ஆசிரியர்கள் நேர்முகப் பரீட்சையில் போதிய தகுதியும்,தராதரமும் உள்ளவர்களின் ஒரு சிலருக்கு நேர்முகப் பரீட்சைக்கான கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை. அதே வேளை நிபந்தனை காலத்திற்கு உட்படாத பலருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் வராதவர்கள் அங்கலாய்த்துக் கொண்டு அங்கும் மிங்கும் ஓடித் திரிந்ததன் பின்னர் சிலருக்கு பெக்ஸ் மூலம் நாளுக்கு நாள் அழைப்பு கடிதம் வந்து கொண்டு இருக்கிறது.

அப்படியானால் ஆரம்பத்தில் தகுதி இல்லையென்று புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு பெக்ஸ் மூலம் அனுப்பும் அளவுக்கு அத்தகுதி எங்கிருந்து வந்தது?

அவ்வாறெனின் இது அதிகாரிகளின் அசமந்த போக்கா? அல்லது அரசியல் வாதிகளின் தலையீடா?

போதிய தகைமை இருந்தும் செல்வாக்கு இல்லாத அப்பாவிகளின் நிலை என்ன வாகும்?

தகுதி இருப்பின் அனைவருக்கும் ஒரே நேரத்தில் நேர்முக தேர்விற்கான அழைப்புக் கடிதத்தை அனுப்பி இருக்கலாம் அல்லவா?

பெக்ஸ் மூலம் தேர்விற்கான அழைப்புக் கடிதம் வந்தவர்களுக்கு மேலதிகமாக இன்று 2017/07/01 நேர்முகப் பரீட்சை 
நடப்பது செல்வாக்கு உள்வர்களுக்கான நேர்முகப் பரீட்சை என்றே எம்மால் கருதப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரே இது உங்களின் தார்மீக கொள்கைக்கு பொருத்தமானதா? 
தயவு செய்து குழம்பி போயிருக்கும் மக்களை தெளிவுப்படுத்துங்கள்.

திருமதி.ஜான்சி ராணி சலீம்
வட மாகாண அமைப்பாளரும்,அகில இலங்கை மகளிர் அமைப்பு தலைவியும்.
தேசிய காங்கிரஸ்

Comments