யாழ். தென்மராட்சியில் மோதல்? ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ். தென்மராட்சிப் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான ஐந்து பேர் சாவகச்சேரி வைத்தியசாலையில், நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய், மகள் உள்ளிட்ட ஐவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் காரணமாகவே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment