எங்களை ஒழித்துக்கட்ட சதி நடவடிக்கை! நாமல் கடும் குற்றச்சாட்டு


"அபயாராம விகாரையில், அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவானது, ஒன்றிணைந்த எதிரணியை ஒழித்துக்கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும்" என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முன்னதாக நாரஹேன்பிட்டி, அபயாராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் காரணமாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அபயாராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments