மாணவர் கடத்தல் விவ­கா­ரத்தை திசை திருப்பும் முயற்­சிகள்


கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற­நகர் பகு­தி­க­ளி­லி­ருந்து வெள்ளை வேனில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்ட சம்­ப­வத்தை அர­சி­ய­லாக்க வேண்டாம் என்றும் தமது பிள்­ளைகள் விட­யத்தில் நீதியை நிலை­நாட்ட ஒத்­து­ழைக்­கு­மாறும் அவர்­க­ளது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

2008 ஆம் ஆண்­டுக்கும் 2009 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் தலை நகரின் பல பிர­தே­சங்­களில் இருந்தும்  கடத்­தப்­பட்டு திரு­கோ­ண­மலை, கொழும்பு கடற்­படை முகாம்­களில்  இவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

கடத்­தப்­பட்ட 11 பேரில் மூவர் முஸ்­லிம்­க­ளாவர். ஏனையோர் தமி­ழர்கள். இந் நிலையில் இவர்கள் அனை­வரும் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்றும் அதன் கார­ண­மா­கவே கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அண்­மையில் முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். 

இதனை முற்­றாக மறுத்­துள்ள கடத்­தப்­பட்­ட­வர்­களின் பெற்றோர் தமது உற­வு­க­ளுக்கு பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் எந்­த­வித தொடர்­பு­களும் இல்லை என்றும் இந்த சம்­ப­வத்­துக்கு அர­சியல் சாயம் பூசி திசை திருப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

உண்­மையில் மேற்­படி கடத்தல் சம்­ப­வ­மா­னது கப்பம் பெறும் நோக்கில் கடற்­ப­டையைச் சேர்ந்த குழு ஒன்­றினால் மிகவும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட்­டமை உறு­தி­யா­கி­யுள்­ளது.  

இக் கடத்­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய 7 கடற்­படை அதி­கா­ரிகள் இது­வரை கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  இதன் ஒரு முக்­கிய திருப்­ப­மா­கவே கடற்­ப­டையின் முன்னாள் பேச்­சாளர் கொமடோர் டீ.கே.பி. தச­நா­யக்க கடந்த வாரம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாக கரு­தப்­படும் மேலும் சிலர்  எதிர்­வரும் நாட்­களில் கைது செய்­யப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அந்­த­வ­கையில், மேற்­படி கடத்தல் சம்­பவம் தொடர்பில் உண்மை கண்­ட­றி­யப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தமது பிள்­ளை­க­ளையும் உற­வு­க­ளையும் பறி­கொ­டுத்து கடந்த 8 வருட கால­மாக பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் நீதி­மன்றப் படி­க­ளிலும் ஏறி இறங்கி கண்­ணீரும் கம்­ப­லை­யு­மாக அலையும் அப்­பாவிப் பெற்­றோரின் உணர்­வு­களில் விளை­யாடும் வித­மாக விமல் வீர­வன்ச போன்றோர் கருத்து வெளி­யி­டு­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

கடத்­தப்­பட்ட மேற்­படி நபர்­க­ளுக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்கும் எந்­த­வித சம்­பந்­தமும் இல்லை என்­பது குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களில் தெளி­வாகப் புலப்­பட்­டி­ருக்க, விமல் வீர­வன்ச அவ்­வாறு கூறு­வதன் பின்­னணி என்ன என்­பது பற்­றியும் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை நடத்த வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் விமல் வீரவன்ச போன்றோரின் ஆசீர்வாதங்களுடனேயே இவ்வாறான குற்றச் செயல்கள் அரங்கேறின.

இந் நிலையில் தற்போதும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாக பொய்களை அவிழ்த்துவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

Comments