ஆளும் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று
ஆளும் கட்சியின் தீர்மானகரமான கூட்டம் ஒன்று இன்று மாலை நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான தேசிய அரசாங்கம் தொடர்பிலான உடன்படிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் விதம் பற்றியும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருப்பதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.


Comments
Post a Comment