சீதனக் கொடுமைகளைப் பெண்ணைப் பெற்றோர் அனுபவிக்க வேண்டுமா ?

By பாத்திமா மரியம்

மகளை திருமணம் முடித்த மருமகனுக்கு வேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு வேலை வாங்கி தர வேண்டும் அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும். அல்லது வெளிநாடு செல்ல விஷா எடுத்து கொடுத்து ஃபிலைட் டிக்கட் எடுத்து கொடுத்து, அவன் பொருளீட்ட இப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.


சொந்த வீடு இல்லாதவனாக இருந்தால் அவனுக்கு வீடு கொடுக்க வேண்டும் அல்லது வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பான். நம்மவீட்டில் வந்து உக்கார்ந்து கொண்டு நம்மையே அதிகாரம் பண்ணுவானுங்க. மாமனார்-மாமியார் சொத்தில் உரிமை கொண்டாடுவது – அவர்கள் குடும்ப விஷயத்தில் எல்லாவற்றிலும். தலையிடுவது தன்னுடைய சுய நலத்துக்காக மாமனார்-மாமியார் குடும்ப விஷயத்தில் எடுக்கும் முடிவுகளில் சுதந்திரத்தில் தலையிட்டு அதிகாரம் செய்வது போன்ற கொடுமைகள்.

அதிலும் பெற்றோகள் இல்லாத மாப்பிள்ளை என்றால் இன்னும் பல கொடுமைகள்.... சித்தி வீட்டிலோ அல்லது அவனை வளர்த்தவர்கள் வீட்டிலோ அல்லது அவன் எங்கிருந்து வளர்ந்தானோ அந்த வீட்டிற்கு மருமகளா இருக்க வேண்டிய கட்டாயம். தன் மனைவிக்கு கண்ணியம் கொடுத்து தன் வீட்டுக்காரியாக – தன் இல்லத்துக்கு அரசியாக இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணைவியை அவனை வளர்த்த வீட்டுக்கு அடிமையாக ஆக்கிவிடுகிறான்.

அதிலும் வெளிநாடு செல்லும் கணவாக இருந்தால் மனைவி எங்கே இருக்க வேண்டும். என்பதில் அவன் செய்யும் தவறு ( கொடுமை) மிகப்பெறியது. ஒரு பெண்ணிற்கு எங்கே அன்பும் அரவனைப்பும் ஆதரவும் பாதுகாப்பும் அதிகமோ. அதை விட்டு விட்டு தன் பெற்றோர்களிடம் விட்டு செல்வது. பின்பு மாமியார் மருகள் பிரச்சனை அவனுடைய வீட்டோடு இருக்கும் அக்கா தங்கையுடன் பிரச்சனை, அவனுடைய அண்ணன் தம்பியால் அவளுக்கு எற்படும் (கற்புக்கு) பிரச்சனை. இவற்றை அவளால் தாங்க முடியவில்லை என்றால் நாடு திரும்பியதும் மனைவியை தலாக் கொடுப்பது அல்லது இவற்றை தாங்க முடியாமல் இந்த புருஷனே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் மனைவியின் மிகக்கொடுமையான நிலைமை.

இதையெல்லாம் தன்னை ஆம்பிள்ளை என்று சொல்பவன் சிந்திக்க வேண்டும் நான் ஆம்பிள்ளை என்று பொண்டாட்டியை மிரட்டுபவன் சிந்திக்க வேண்டும்.

பெண்ணை பெற்றவர்களிடமிருந்து கல்யாண டிரஸ் முதல் செருப்பு வரை வாங்கி போட்டுக்கிட்டு, உன்னுடைய கல்யாண செலவை அவர்களிடம் வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, உன் குடும்பத்தாரும் உன் உறவினரும் உன் நண்பர்களும் அவர்கள் கொடுத்த சாப்பாட்டை திண்ணுட்டு, அவர்களின் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி அதுவும் நாகை துணிமனிகளுடன் வீட்டுக்கு தேவையான பாத்திரங்களுடன். போதாதற்கு உனக்கு பைக்கு என்று இவ்வளவையும் உனக்கு கொடுத்து உன்னை நம்பி வந்த மனைவியை நீ எப்படி நடத்துகிறாய் உன் பெற்றோர் அவளை எப்படி நடத்துகிறார்கள். என்று சிந்தித்து பார்.

(கண்ணியத்திற்குரிய அவர்களை) உன் மனைவியை மிரட்ட அதிகாரம் பண்ண உனக்கு அருகதை இருக்கிறது. (மார்க்கத்துக்கு முரணான காரியத்தைத்தவிர)

நீ நியாயமான மனிதனாய் இருந்தால் – நரகம் என்பது அநியாயக்காரர்களுக்கு நிச்சயம் உண்டு என்று நீ நம்பினால்சிந்தித்து பார்த்து செயல்படு.

உண்மையான ஆம்பிள்ளையாக இருப்போம் – சொந்த உழைப்பில் வாழ்வோம் – இஸ்லாத்தை பேணுவோம் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து. உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உண்மையான முஸ்லிமாக மரணிப்போம். அல்லாஹ்விடம் நாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவோமாக!!!!

முதலில், பெண்களுக்கு அல்லாஹ் ஏன் மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்கிறான் ;

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا ﴿٤﴾

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

Comments