நல்லிணக்கம்


தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்க திருகோணமலை மாவட்ட  நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் 
நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய பிரகடனமும் செய்யப்பட்டது.

இலங்கை சமய பாடசாலைக்கல்வி முறையில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை நிறுவனமயப்படுத்தல்.இன மத பிரதேசம் மற்றும் மொழி போன்று நிலவிவரும் பல்வகைத்தன்மைக்கு மதிப்பளித்து இலங்கையர் அனைவரும் ஒன்றானவர் என்ற ரீதியில் ஒன்று படும் நோக்கில் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்.கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம.கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்.பாராளமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப். எம்.எஸ்.தௌபீக். எஸ்.துரைரெட்ணசிங்கம் கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி.மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments