நல்லூர் சூட்டுச் சம்பவம் – சரணடைந்தவர் தனிக் கூண்டில் அடைக்கப்பட்டார்!


கடந்த சனி இடம்பெற்ற நல்லூர் சூட்டுச் சம்பவத்துடன்தொடர்புடைய சூத்திரதாரி யாழ்ப்பாணச் சிறையில் தனி அறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நல்லூர் பின்வீதியில் வைத்து யாழ். மேல் நீதிபதி இளஞ்செழியன் மீது தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி நேற்று முன்தினம் யாழ். காவல்துறையில் சரணடைந்தார்.

சரணடைந்த சந்தேக நபரை காவல்துறையினர் யாழ். நீதவான் சதீஸ்கரனின் இல்லத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபர் யாழ். சிறைச்சாலையில் தனிக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அவரது இரண்டாவது மனைவி சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments