அமெரிக்காவின் சதிதான் மோடி வந்ததும், மஹிந்த வீழ்ந்ததும்..!
மோடி ஆட்சிக்கு வந்ததற்கும் மஹிந்த ஆட்சியில் வீழ்ந்ததற்கும்
திட்டம் தீட்டி செயல்பட்டது அமெரிக்காவும் அதன் சார்வு நாடுகளுந்தான்.
தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரேமாதிரியான செயல்பாடுகள்தான் மறைமுகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
அது வரிவிதிப்பு என்றாலும் சரி, இனவெறிக்கு ஒத்துழைப்பு என்றாலும் சரியே.
அதற்காகத்தான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மஹிந்தவுக்கு தற்போதும் மறியாதை கொடுத்துவருகின்றன.
மஹிந்தவை பொருத்தவரை முஸ்லிம் நாடுகளுடன் அவர் நெருங்கிய உறவைபேணிவருகின்றவர் மட்டுமல்ல பலஸ்தீன மக்களுக்காகவும் குரல் கொடுத்துவருகின்றவர்.
இந்த விடயங்களுக்காகவும், இலங்கையில் புரையோடிப்போன யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளினால் எதிரியாக பார்க்கப்பட்டவர்தான் இவராவார்.
இவரை வீழ்த்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியாவின் உதவி தேவைபட்டபோது அதற்கு அன்றிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை, மாறாக மஹிந்தவுக்கு சகல வழிகளிலும் உறுதுணையாகவே இருந்துவந்தார்கள், அதற்காக இந்தியாவில் ஆட்சிமாற்றம் நிகழ்த்தப்பட்டது மோடி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பட்டார்.
அதன் பிற்பாடு இலங்கை விடயத்தில் இந்தியாவின் கொள்கை மாற்றம் அடைந்தது, அதனை தொடர்ந்து மஹிந்தவும் ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கப்பட்டார்.இதற்கெல்லாம் அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் பின்னாலிருந்து செயல்பட்டது எனலாம்.
மஹிந்தவை வீழ்த்துவதற்கு ஒரேவழி, தேர்தலில் அவரை தோற்கடிப்பதுதான் என்ற காரணத்துக்காக இனவாதிகளை வைத்து முஸ்லிம்களை சீண்டி அதன் மூலம் மஹிந்தவுக்கு எதிராக முஸ்லிம்களை திசைதிருப்பிய விடயமாகும்.
அதனை அறிந்து கொள்ளாத மஹிந்த அந்த இனவாதிகளை கண்டுகொள்ளாமல் விட்டதற்கு இன்று மனம்வருந்துகின்றார். தன்னோடு கூட இருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு நாளை தனக்கு எதிரியாக மாறப்போகின்றவரை கூட அறிந்து கொள்ளமுடியாதளவுக்கு வீயூகம் அமைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டவர்தான் இவராவார்.
இதில் வேடிக்கை என்னவென்றால்...இந்த இரு நாட்டின் ஆட்சிமாற்ற விடயங்களுக்கெல்லாம் பகடைக்காய்கலாக பாவிக்கப்பட்டதும், பாவிக்கப்பட்டுவருவதும் முஸ்லிம்கள்தான்.
இதன் உண்மையை அறிந்து கொள்ளாத முஸ்லிம் சமூகம் எப்படி இருக்கிறது என்றால்.(விபரீதம் தெறியாமல் விளையாட்டு பொருள்தானே என்று நினைத்துக்கொண்டு நெருப்போடு விளையாடும் சிறுபிள்ளையின் நிலையைபோன்றது எனலாம்)
அமெரிக்கா எவனை பார்த்து நண்பன் என்கின்றானோ அவன் முஸ்லிம்களுக்கு எதிரியாகத்தான் இருப்பான்.
அமெரிக்கா எவனை பார்த்து எதிரி என்கின்றானோ அவன் முஸ்லிம்களுக்கு நண்பன்தான் என்பதை எப்போது முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்கின்றதோ அப்போதுதான் அமெரிக்காவின் சதி என்ற முகத்தில் கரி பூசப்படும்.
இலங்கைையை பொருத்தவரை எல்லாநாடுகளுக்கும் அதன் மீது ஒரு கண்தான், அதற்காக தங்களுக்கு சார்பான அரசாங்கங்கள் வருவதை விரும்புவதும் இயல்புதான், அதற்காக ஒரு சமூகத்தை பலிகடாவாக்கி காரியம் சாதிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது.
உலகத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளை தன்வசம் வைத்துக்கொள்ள என்னென்ன சதிகளை இந்த சதிகாரர்கள் செய்து வருகின்றார்கள், அதற்காக எத்தனை அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதெல்லாம் யாரும் அறியாத ஒன்றல்ல.
இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை இந்த இரு நாட்டு அரசாங்கங்களும் கண்டுகொள்ளுவதாக தெறியவில்லை, சில இனவாத செயல்பாடுகளுக்கு அவர்களே துணையாகவும் இருந்துவருவதையும் பார்த்தால் சதி விதியையும் வென்றுவிடுமோ என்று என்னத்தோன்றுகிறது.
ஆகவே முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காமல் மிகவும் நிதானமாக சிந்தித்து செயல்பட்டாலேயொழிய எதிரிகளின் சதிவலையில் வீழ்ந்துவிடாமல் இருக்கலாமே தவிர மற்றும் படி எம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஒரு சமூகம் திருந்தாதவரை நாம் அவர்களை திருத்தமாட்டோம் என்று இறைவன் கூறுகின்றான். நாம் திருந்த நினைத்தால் நிச்சயமாக இறைவன் அதற்கு உதவி செய்வான் என்பதே உண்மையாகும்.
எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.


Comments
Post a Comment