ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலத்தின் புதிய அதிபராக மர்சூர் நியமனம்
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலத்தின் புதிய அதிபராக பீ.எம்.ஏ.மர்சூர் இன்று (10) திங்கள்கிழமை கடமைப்பொறுப்புக்களை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியின் அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் ரொட்டவெவ கிராம மக்களின் வேண்டுகோளின் பேரில் பீ.எம்.ஏ.மர்சூக் அதிபரை நியமிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும்.பணிப்பாளருக்கும் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து இவர் இன்று முதல் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கிராமத்திலுள்ள பல அமைப்புக்கள் ஏற்கனவே கடமையாற்றிச்சென்ற அதிபர் ரொட்டவெவ கிராமத்தைச்சேர்ந்தவர் என தெரிவித்ததுடன் அவர் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாடுபட்டவர் அவரை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்தே இவர் நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திப்பணிகள் அசமந்த நிலையில் காணப்படுகின்ற நிலையில் இவரை அதிபராக நியமித்தமைக்காக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்திற்கும். அதிகாரிகளுக்கும் நன்றிகளையும் ரொட்டவெவ கிராமமக்கள் தெரிவித்துக்கொள்கின்றனர்.


Comments
Post a Comment