கொழும்பில் மெல்லச் சாகும் தமிழ்!
கொழும்பின் பல்வேறு இடங்களில் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப்பலகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பேருந்துகள் மற்றும் அரச அலுவலங்களிலும் இவ்வாறான தமிழ் கொலைகளை காணக்கூடியதாக உள்ளது
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடங்களில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சரியாக எழுதப்பட்டுள்ளதுடன், தமிழில் எழுதப்பட்டுள்ளதில் “ல“ அழிக்கப்பட்டிருக்கிறது.
அது தெரிந்து அழிக்கப்பட்டுள்ளதா அல்லது தெரியாமல் அழிந்ததா என்பதே சந்தேகமாக இருக்கிறது. குறிப்பாக தலைநகரத்தின் முக்கியமான இடத்தில், இ்ந்தப் பகுதியில் தமிழர்கள் பலர் கூடும் இடமும் கூட. ஆனால் இதுவரை இந்த பிரச்சினை குறித்து முறைப்பாடு எதனையும் பதிவு செய்யவில்லை.
நீண்ட காலமாக இது அழிக்கப்பட்டு அல்லது அழிந்து போய்க்காணப்படுகிறது. இதேவேளை, இது குறித்து கருத்துரைக்கும் பொது மகன் ஒருவர், இது திட்டமிட்டு அழிக்கப்பட்டது போன்று இருப்பதாக குறிப்பிடுகிறார்.
மற்றைய இரண்டு மொழிகளிலும் எந்தப் பழுதும் இல்லாமல் இருக்கும் பொழுது, தமிழில் மட்டும் எப்படி அழிவு வரும் என்றும் கேள்வி எழுப்புகிறார். எதுவாயினும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலையகத்தில் திறந்து வைத்த மருத்துவமனையின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியில் எழுத்துப் பிழைகள் இருந்ததுடன், அது விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment