கட்சித் தலைவர்களை சந்தித்தார் பிரதமர்: புறக்கணித்தது மஹிந்த அணி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சித் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பி முதலான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
எனினும், இந்தக் கலந்துரையாடலை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி புறக்கணித்துள்ளதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment