உயர்தர மாணவர்களுக்கான விசேட திட்டம்
2017ம் ஆண்டின் அரச வரவு செலவுத்திட்டப் பரிந்துரைக்கேற்ப நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர 12ம் வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கு டெப்லட் கணினிகளை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான சகல மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்று நிரூபமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2017.09.07ம் திகதி அன்று க.பொ.த. 12 ஆம் வகுப்பில் பயில்கின்ற மாணவர்களின் விபரங்களை தயாரித்து அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி 2017ல் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர்கள், அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட விபரங்களை தரப்பட்ட படிவத்தில் நிரப்பி அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளன.
அத்துடன், உயர்தரம் கற்பிக்கும் அசிரியர்களுக்கும் டெப்லட் வழங்கப்பட இருக்கிறது. அதற்கான தகவல்களை அதிபர் அல்லது பிரதி அதிபர் மூலமாக நிரப்பி அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல ஆவணங்களும் எதிர்வரும் 2017.09.14ம் திகதிக்கு முன்னர் கல்வியமைச்சிற்கு வந்து சேர வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், டெப்லட் கணிணியைப் பகிர்ந்தளிக்கும் போது இப்படிவங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால் நேர்த்தியாக சரியாக நிரப்பப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Comments
Post a Comment