இன்று பாராளுமன்றத்தில் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் அரசியலமைப்பு பேரவை இன்று பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் உப குழுக்கள் முன்வைத்துள்ள பல்வேறு யோசனைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை, புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ இலங்கைக்கு தேவையில்லை என மூன்று பீடங்களின் தலைமை மகாநாயக்க தேரர்கள் நேற்று ஏகமனதாக தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment