மஹிந்தவினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது- பந்துலால்
அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தை விட்டும் பிரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முயற்சி வெற்றியளிக்காது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
சிறிக்கொத்தவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்று பல்வேறு பத்திரிகைகளிலும் அரசாங்கத்திலுள்ள சிலர் விலகப் போவதான செய்தி இடம்பெற்றிருந்தது. இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதாக கூறுபவர்கள் அரசியலில் வங்குரோத்து நிலையில் உள்ளவர்களே எனவும் அவர் கூறியுள்ளார்.


Comments
Post a Comment