தோப்பூர் ஈஸ்ட் லங்கா வெற்றி!
தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.திருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 32வது போட்டி செவ்வாய்கிழமை (04) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இப் போட்டியில் தோப்பூர் ஈஸ்ட் லங்கா , தோப்பூர் நியூஸ்டார் ஆகிய அணிகள் மோதிய இப் போட்டியில் தோப்பூர் ஈஸ்ட் லங்கா விளையாட்டுக் கழகம் 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஈஸ்ட் லங்கா விளையாட்டுக் கழகம் 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.இவ் அணி சார்பாக எம்.பஸ்ரின் 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
176 என்ற இலகுவான வெற்றி இழக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தோப்பூர் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 14 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.இவ் அணி சார்பாக றஹீம் இம்தியாஸ் மாத்திரம் அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை பெற்ற தோப்பூர் ஈஸ்ட் லங்கா வினையாட்டுக் கழக வீரர் எம்.பஸ்ரின் தெரிவானார்.
இப் போட்டித் தொடரின் 32 வது போட்டியில் பிரதம அதிதியாக அபான்ஸ் நிறுவனத்தின் மூதூர் பிராந்திய முகாமையாளரும், பிரபல சமூக சேவையாளருமான பாஸ்கரன் தனுராஜன் கலந்து சிறப்பித்தார்.






Comments
Post a Comment