திருகோணமலை-கண்டி வீதியில் விபத்து, படைவீரர் ஒருவர் பலி

இஹ்சானா பரீட்

திருகோணமலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஊர்காவற்படை வீரர் ஒருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாதையில் சென்று கொண்டிருக்கும் போது இனம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் இப்படை வீரர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்போபுர பொலிஸ் நிலையத்தில் ஊர்காவல் படை வீரராக கடைமையாற்றும் 31 வயதுடைய சஞ்ஜீவ பண்டார என்ற இரு பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Comments