பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சை பலப்படுத்துவதன் ஊடாக எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள், மற்றும் மாகாண சபை தேர்தல்களின் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கந்தளாய் பேராறு பிரதேசத்தில் இரண்டாம் கட்டமான மூன்று கோடி ரூபாய் செலவில் இரண்டு கிலோ மீற்றர் காபட் வீதியாக்கும் ஆரம்ப நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) மாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீர்ப்பாசன வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கிமின் நிதியொதுக்கீடு மூலமாக இவ் பேராறு வீதி காபட் வீதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசீயத் தலைவரின் கையைப் பலப்படுத்துவதன் மூலமாகவும் பிரதேசத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்புகள் மூலமாகவே நாம் கணிசமான வேலைத்திட்டங்களை நீறைவேற்றிக் கொள்ளலாம்.
கந்தளாய் மண் 1958,மற்றும்1953 ஆம் ஆண்டு குடியேற்றங்கள் மூலமாக கிண்ணியா பகுதியிலிருந்து கந்தளாய் பகுதிக்கு குடியேற்றப்பட்டவர்கள் அப்போதிலிருந்தே அனைத்து வீதிகளையும் இன்றைவரைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இவ்வாரான தொடர்ச்சியான அபிவிருத்திகளை தக்கவைத்துக் கொள்வதென்றால் அனைவரும் ஒன்றினைந்து முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் துரதிஸ்டவசமாக நான் தோல்வியைத் தழுவிக் கொண்டேன் வெற்றி பெற்றிருப்பேனாக இருந்தால் ஒரு பிரதி அமைச்சோ அல்லது இராஜங்க அமைச்சோ திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைத்திருக்கும். இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இம்மாவட்டத்திற்கு தேசியப் பட்டியலை வழங்கியிருக்கின்றது என்றால் அது பாராட்டப்படக் கூடியதொன்றாகும்.
இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கட்சி வேறு பாடுகளை மறந்து அனைவரும் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக செயற்பட வேண்டும் .
இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளை ஒவ்வொரு பிரதேசத்திலும் மேற்கொண்டு வருகின்றது. இது எம்மக்களின் வெற்றிக்கான செயற்பாடாக அமைகின்றது என்றார்.
இந்நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் மற்றும் பள்ளிவாயல் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள்,உட்பட பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.


Comments
Post a Comment